இங்கிலாந்து ராணிக்கு கொரோனா - தனிமையில் இருப்பதாக தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, February 20, 2022

இங்கிலாந்து ராணிக்கு கொரோனா - தனிமையில் இருப்பதாக தகவல்!

இங்கிலாந்து ராணிக்கு கொரோனா - தனிமையில் இருப்பதாக தகவல்!


ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு திரை, விளையாட்டு, பல்வேறு நாட்டு தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆளாகி வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளும் இந்த பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.இந்நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாயாரான ராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் பகுதியில் அவரை சந்தித்து விட்டு திரும்பினார். அடுத்த 2 நாட்களில் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. எனினும், ராணி பரிசோதனை செய்து கொண்டாரா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை இன்று உறுதிப்படுத்தி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வருகிற வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து இலகுவான பணிகளை தொடர்ந்து செய்வார் என்று அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.க்ஷஇதனை தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி ராணி இரண்டாம் எலிசபெத் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும், அனைத்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் பின்பற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் முழுமையாக கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad