குற்றம் செய்பவர்களுக்கு துணை போவதா?- முதல்வருக்கு முன்னாள் முதல்வர் நறுக் கேள்வி!
குற்றம் செய்பவர்களுக்கு துணை போவதா என்று முதல்வர் ஸ்டாலினை நோக்கி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை ராயபுரத்தில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.
திமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுகவை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கள்ள ஓட்டு போட முயன்றவரை போலீசில் ஒப்படைத்தது குற்றமா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது தவறு என முதல்வர் கூறுகிறாரா? எதையும் சட்டரீதியாக சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.
கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து கொடுத்த முன்னாள்
அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது; குற்றம் செய்தவரை பிடித்துக்கொடுப்பது தவறா?. குற்றம் புரிபவர்களுகக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைபோவது வேதனையளிக்கிறது.வாக்கு எண்ணிக்கையின்போது வெற்றி பெறும் அதிமுக வேட்பாளர்களை தோல்வியுற்றதாக அறிவிக்க வாய்மொழி உத்தரவுகள் பிறபிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.எனவே ஒவ்வொரு வார்டு முடிவுகளை அறிவித்து, சான்றிதழ்களை வழங்கிய பிறகே அடுத்த வார்டு வாக்குகளை எண்ண வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment