அந்த கொடூர சம்பவம் நடந்து மூணு வருஷம் ஆயிடுச்சு... வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவஞ்சலி
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்து நமது பாதுகாப்புப் படையினருக்கு நாடு முழுவதும் இன்று புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
உலகமே காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்த நாளி்ல்தான் அந்த பெருந்துயர் சம்பவம் நிகழ்ந்தது. 2019 பிப்ரவரி 14 ஆம் தேதி, பயிற்சி முடித்து முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீசாரின் வாகனங்கள் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடைபெற்றது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நிகழ்த்தியதாக கண்டறியப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் ரிசர்வ் படை போலீசார் 39 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
உலகையே உலுக்கிய இந்த துயரச் சம்பவத்துக்கு பதிலடியாக பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவ போர் விமானங்கள் தாக்கி அழித்தன.இந்த நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, புல்வாமா மாவட்டம், லேத்போராவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பலியான வீரர்களின் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தப்பட்டது.
டெல்லியில் உள்ள ரிசர்வ் போலீஸ் படை தலைமையகத்திலும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் சமூக வலைதளங்களில்பொதுமக்களும் புல்வாமாவில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.பலியான வீரர்களின் நினைவாக ரிசர்வ் போலீஸ் படை முன்பு வெளியிட்ட வீடியோ காட்சிகளை பதிவிட்டும், இந்தியாவுக்கு இன்று கருப்பு நாள் என்று குறிப்பிட்டும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment