தனுஷ் - ரஜினி பட நாயகிக்கு விவாகரத்து ? லிஸ்ட் போய்கிட்டே இருக்கே..!
நடிகை எமி ஜாக்சன் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வருகின்றனதமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். தன் முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த எமி அதன் பின் விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.விக்ரம் நடிப்பில் வெளியான தாண்டவம், தனுஷ் நடிப்பில் வெளியான தங்கமகன், விஜய் நடிப்பில் தெறி போன்ற படங்களில் நடித்தார் எமி.
தமிழில் மட்டுமல்லாது பிற மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.இவருக்கென்று தனி ரசிகர்கூட்டமே இருந்த்து வருகிறது.மேலேயும் அவ்வப்போது சமூகத்தளங்களில் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் எமி.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை எமி ஜாக்சன் காதலித்து வந்தார். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் தற்போது அடிக்கடி பிரச்சனைகள் வருகிறதாம். இதன் காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து பெறப்போவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் எமி ஜாக்சன் பிரிட்டன் நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்ததாக தகவல்கள் பரவிவருகிறது.
பிரபல பிரிட்டன் நடிகர் எட் வெஸ்டவிக் என்பவருடன் எமி ஜாக்சன் டேட்டிங் செய்து வருகிறாராம்
தற்போது கணவரை பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் பிரிட்டன் நடிகர் எட் வெஸ்டவிக் என்பவரை எமி ஜாக்சன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வருகின்றன. இருப்பினும் இது வெறும் வதந்தியா இல்லை உண்மையான செய்தியா என்பது சம்மந்தப்பட்டவர்கள் அறிவித்தால் மட்டுமே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment