IPL 2022: ‘ஒரு டீம்ல’…இத்தனை ஆல்-ரவுண்டர்களா? தரமான அணி இதுதான்: ஆகாஷ் சோப்ரா வியப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

IPL 2022: ‘ஒரு டீம்ல’…இத்தனை ஆல்-ரவுண்டர்களா? தரமான அணி இதுதான்: ஆகாஷ் சோப்ரா வியப்பு!

IPL 2022: ‘ஒரு டீம்ல’…இத்தனை ஆல்-ரவுண்டர்களா? தரமான அணி இதுதான்: ஆகாஷ் சோப்ரா வியப்பு!


தரமான அணி எது என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த 12, 13ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர். இதில் 67 வெளிநாட்டு வீரர்களும், 137 உள்நாட்டு வீரர்களும் அடங்குவர். இவர்களது மொத்த மதிப்பு 551.70 கோடி ரூபாய் ஆகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா 25 பேரை வாங்கியுள்ளன. இதுதான் அதிகபட்சம். குறைந்தபட்சமாக லக்னோ அணி 21 பேரை மட்டுமே வாங்கியுள்ளது.

சோப்ரா பேட்டி:

இந்நிலையில் எந்த அணி, சரியான அளவில் பணத்தை செலவிட்டு, சிறந்த அணியை உருவாக்கியுள்ளது என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்து கூறியுள்ளார். அதில், “என்னை பொறுத்தவரை மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்பட்ட அணி என்றால், அது லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ்தான். அவர்களிடம் இருந்த அனைத்து தொகையையும் முழுமையாக செலவு செய்து, 21 வீரர்களை வாங்கியுள்ளனர். ஒரு ரூபாயைக் கூட மீதம் வைக்கவில்லை” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், “அவர்கள் கே.எல்.ராகுல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரை தக்கவைத்திருந்தனர். ஸ்டாய்னிஸ் இருக்கும் நிலையில் யாராவது மீண்டும் ஜேசன் ஹோல்டரை எடுப்பார்களா? பொதுவாக இருவரில் யாரை வாங்குவது என்ற குழப்பத்தில்தான் அனைவரும் இருப்பார்கள். ஆனால், லக்னோ அணி இருவரும் தட்டித்தூக்கியுள்ளது” என்றார்.

பாராட்டு:

“அந்த அணி, 29 வயதாகும் ஓபனர் குவின்டன் டி காக்கை வாங்கியுள்ளது. இடது கை வீரரான இவரும், ராகுலும் நிச்சயம் சிறந்த துவக்கம் தருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இவருக்கு 6.75 கோடி கொடுத்தது சரியான முடிவுதான். மணிஷ் பாண்டே, ராகுல் தேவத்தியா, தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, க்ருனால் பாண்டியா போன்ற திறமையானவர்களையும் அந்த அணி வாங்கியுள்ளது. இதில் தீபக் ஹூடா, மணிஷ் பாண்டே ஆகியோரை சிறந்த தொகைக்கு எடுத்துள்ளது. லொயர் ஆர்டர் ஆல்-ரவுண்டர்களாக ஸ்டாய்னிஸ், க்ருனால் பாண்டியா, ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம் / ஹூடா ஆகியோர் இருக்கிறார்கள். எந்த அணியும் இப்படியொரு ஆல்-ரவுண்டர் படையை வைத்திருக்கவில்லை” எனக் கூறினார்.
“இப்படி அதிகப்படியான ஆல்-ரவுண்டர்கள் இருந்தும், அவர்களுக்கான இடமும் உறுதியாகியுள்ளது. இதனால், லக்னோ அணியின் பிளேயிங் லெவன்தான் சிறந்தாக இருக்கிறது. லெவன் அணித் தேர்வில் கூட குழப்பம் வர வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad