'சேர்ந்து நின்னாலும் தனியாக நின்னாலும் ஜீரோ தான்' - திண்டுக்கல் லியோனி கிண்டல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

'சேர்ந்து நின்னாலும் தனியாக நின்னாலும் ஜீரோ தான்' - திண்டுக்கல் லியோனி கிண்டல்!


'சேர்ந்து நின்னாலும் தனியாக நின்னாலும் ஜீரோ தான்' - திண்டுக்கல் லியோனி கிண்டல்!


அதிமுக - பாஜக கூட்டனியாக போட்டியிட்டாலும், தனித்தனியாக போட்டியிட்டாலும் ஜீரோ தான் என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், திமுக நட்சத்திர பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி சாடினார்.
தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை அறிமுக கூட்டம் தருமபுரி கிழக்கு மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: "திமுகவிற்காக உழைத்து கொண்டே இருந்தால் பதவியும், பொறுப்பும் தேடி வரும் என்றும், திமுக என்ற ஆலமரத்தின் கீழ் நின்றால் விழுதுகளாக தாங்கி பிடிக்கும் இயக்கம் திமுக.
ஓட்டு கேட்க வந்த கலைஞர்; மகிழ்ச்சியில் திமுகவினர்!

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறுகின்றனர். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 8 மாத காலத்தில் மக்களிடம் பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு கண்ட ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக் கூறினார்.

மேலும், பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து நின்றாலும் ஜீரோதான், தற்போதைய தேர்தலில் தனி தனியாக நின்றாலும் தமிழகத்தில் கிடைக்க போவது ஜீரோதான். ஆனால் தமிழகத்தில் என்றுமே தளபதி ஹீரோதான், தமிழகத்தில் இன்று நேற்று அல்ல பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த இயக்கம் திமுக தான் என்றும், பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை கொடுத்தது நமது தாய் கழகமான நீதி கட்சி என்றும், அதனையடுத்து பெண்களுக்கு சொத்துரிமையை சட்டமாக்கியது முத்தமிழறிஞர் கலைஞர் தான் என்றும், அதே போல் தற்போது பெண்களுக்கு அரசியியல் உரிமையை 50 சதவீதம் அளித்தது தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று கூறினார்.இந்தியாவிலேயே இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகபடுத்தியவர் தமிழக முதல்வர் தான் என்று கூறிய திண்டுக்கல் லியோனி, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகை கடனையும் தள்ளுபடி செய்ததோடு, ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற சீரிய திட்டத்தை முதன் முதலில் அறிமுகபடுத்தி அதை செயல்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின்" எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad