பிரதமர் ஆர்டர், ஒரு வாரத்தில் புது பிரச்சனை; பரபரப்பை எகிற விட்ட பாஜக அண்ணாமலை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 9, 2022

பிரதமர் ஆர்டர், ஒரு வாரத்தில் புது பிரச்சனை; பரபரப்பை எகிற விட்ட பாஜக அண்ணாமலை!

பிரதமர் ஆர்டர், ஒரு வாரத்தில் புது பிரச்சனை; பரபரப்பை எகிற விட்ட பாஜக அண்ணாமலை!




பிரதமர் போட்டுள்ள திடீர் உத்தரவு ஒரு வாரத்தில் புதிய பிரச்சனையை கிளப்பும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை எகிற விட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி 16 பேரூராட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் ஆலோசனை கூட்டம் நெல்லை, என்ஜிஓ காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பாரதி ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

நீட் தேர்வை ரத்து செய்ய கம்ப சூத்திரம் இருப்பதாக சொன்ன உதயநிதி உள்ளாட்சி தேர்தல் நடக்கும் நிலையில் துபாயில் உள்ளார். திமுக அரசு மக்கள் நலனுக்கான அரசு அல்ல. ஒன்றிய அரசு என சொன்னால் பாரதத்தின் துணை பிரதமராகிவிடலாம் என தமிழக முதலமைச்சர் நினைக்கிறார்.
நீட் தேர்வு தொடர்பாக தமிழக முதல்வர் கடிதம் எழுதிய 12 நபர்களும் அவருக்கு பதில் அளிக்கவில்லை. இந்த செயலை எங்கள் முதல்வர் செய்வது அவமானமாக உள்ளது. நீட் மூலமாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் இருளர் சமூதாயத்தை சேர்ந்த மாணவி மருத்துவ படிப்புக்கு சென்றுள்ளார்.

கடந்த 2016 வரை ராசிபுரம் பகுதியில் படிக்கும் 25% மருத்துவ மாணவர்கள் வந்துள்ளனர். 10 சதவீத மாணவர்கள் திருச்செங்கோட்டில் இருந்து மருத்துவத்திற்கு சென்றனர். ரியல் எஸ்டேட் அதிபர் எல்லாம் கல்வி தந்தையாக உருவெடுத்தனர். இது போன்றவைகளை தடுக்கவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் உள்ள 50% இடங்களுக்கு அரசு கட்டணத்திற்கு இணையான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என பிரதமர் போட்ட உத்தரவிற்கு இன்னும் ஒரு வாரத்தில் கூக்குரல் எழும்.இதுவரையிலும், 70 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்கள் 2,300 ஆகும். ஆனால் 8 ஆண்டுகளில் 2500 இடங்கள் மருத்துவம் பயில மத்திய அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். பாஜ அண்ணாமலையின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






No comments:

Post a Comment

Post Top Ad