பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு மாதம் லீவு... மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 3, 2022

பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு மாதம் லீவு... மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

பள்ளிகளுக்கு மீண்டும் ஒரு மாதம் லீவு... மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!பள்ளிகளுக்கு பி்ப்ரவரி 7 முதல் மீண்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக இலங்கை கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை காரணமாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிக்க வசதியாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தபட்டு வந்தன.

கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா காரணமாக இலங்கையிலும் பள்ளி. கல்லூரிகளில் ஒரு மாதத்துக்கு மேலாக நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அண்மையில்தான் கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்க்கல்வி பொது தகுதித் தேர்வு (GCE) பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. பள்ளி படிப்பை முடித்த மாணவர்களின் எதி்ர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான இந்த தேர்வை கருத்தில் கொண்டு மார்ச் 6 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு ஒரு மாதம் லிடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்கள் மார்ச் 7 ஆம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என்றும் கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad