நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நீட் விலக்கு கோரும் மசோதாவை சட்டமன்றத்துக்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு சட்ட மசோதா தாக்கல் செய்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இதுகுறித்து முடிவெடுக்காமல் பல நட்களாக கிடப்பில் போட்டிருந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிவைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தருணங்களில் நேரடியாக வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், நீட் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருப்பி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், “நீட் விலக்கு கோரும் மசோதாவையும், தமிழக அரசு அமைத்த உயர் நிலைக் குழுவின் அறிக்கையையும், நீட் தேர்வுக்கு முன்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூக நீதி குறித்தும் ஆளுநர் ஆய்வு செய்துள்ளர்.
நீட் தேர்வு விலக்கு மசோதா தமிழகத்தின் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாக ஆளுநர் கருதுகிறார். எனவே, மசோதாவை மறு பரிசீலனை செய்யும்படி தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 1ஆம் தேதி நீட் மசோதாவை ஆளுநர் திருப்பு அனுப்பிவிட்டார்” என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment