உச்சம் தொடும் ஈகோ யுத்தம்; கொங்கு மண்டலத்தில் முட்டிக் கொள்ளும் அதிமுக!
கொங்கு மண்டலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு இடையிலான ஈகோ யுத்தம் கட்சி தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கைப்பற்றினாலும், கொங்கு மண்டலத்தில் அதிமுக தனது பலத்தை நிரூபித்து காட்டியது. இந்த மண்டலம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிற்குள் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோருக்கு இடையிலான ஈரோ யுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியாக மாறியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளராக கருப்பண்ணன் தான் செயல்பட்டு வந்தார். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அந்தியூர் தொகுதிக்கு வேட்பாளர்கள் தேர்வில் செங்கோட்டையனுக்கும், கருப்பண்ணனுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது. இருவரும் தங்களது ஆதரவாளரை களமிறக்க காய்களை நகர்த்தினர். கடைசியில் கருப்பண்ணன் முடிவு செய்த கே.எஸ்.சண்முகவேலுக்கு சீட் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment