நீட் விலக்கு மசோதா பற்றி மாநிலங்களவையில் விவாதம்.. திமுக நோட்டீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 3, 2022

நீட் விலக்கு மசோதா பற்றி மாநிலங்களவையில் விவாதம்.. திமுக நோட்டீஸ்!

நீட் விலக்கு மசோதா பற்றி மாநிலங்களவையில் விவாதம்.. திமுக நோட்டீஸ்!

நீட் விலக்கு மசோதா மீண்டும் ஆளுநருக்கே அனுப்பிவைக்கப்படும் என திமுக வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்நிலையில், மாநிலங்களவையில் நீட் விலக்கு மசோதா குறித்து விவாதம் நடத்த திமுக சார்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் திமுக நோட்டீஸ்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்காக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மசோதாவை கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதையடுத்து, நீட் தேர்வு குறித்து அடுத்தகட்ட முடிவு பற்றி ஆலோசிக்க பிப்ரவரி 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென நீட் விலக்கு மசோதா மீண்டும் ஆளுநருக்கே அனுப்பிவைக்கப்படும் என திமுக வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்நிலையில், மாநிலங்களவையில் நீட் விலக்கு மசோதா குறித்து விவாதம் நடத்த திமுக சார்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் இன்று அமளி செய்தனர்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad