ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு: மாநில அரசுகளுக்கு பட்ஜெட்டில் காத்திருந்த ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 1, 2022

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு: மாநில அரசுகளுக்கு பட்ஜெட்டில் காத்திருந்த ஷாக்!

ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு: மாநில அரசுகளுக்கு பட்ஜெட்டில் காத்திருந்த ஷாக்!


ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நிதியாண்டுக்கான (2022-23) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தி்ல் இன்று தாக்கல் செய்தார். தமது பட்ஜெட் உரையில் பல்வேறு திட்டங்களை அறிவித்த அவர், மாநில அரசுகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ஓர் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

'ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டம்' நடைமுறை்படுத்தப்படும் என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புதான் அந்த அதிர்ச்சிகரமான தகவல்,

ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி வசூலில் தங்களுக்கு சேர வேண்டிய பங்கினை கேட்டு பெற மாநில அரசுகள் மத்திய அரசிடம் கெஞ்சாத குறையாக மாதக்கணக்கில் கேட்டு கொண்டிருக்கும் நிலை உள்ளது.இந்த நிலையில் ஒரு மாநிலத்தின் வருவாய் இனங்களில் பத்திரப்புதிவு முக்கியமானதாக உள்ளது. இதனையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுவிட்டால் மாநில அரசுகளின் வருவாய் பெருமளவு பாதிக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் நிதி சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறும்போது, 'ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டத்தின் மூலமாக எதிர்காலத்தில் மாநிலத்திற்கு கிடைக்கும் வருமானம் பூஜியம் ஆக்கப்படும்' என்று அவர் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad