Budget 2022 Drone Shakti: அதென்ன ‛ட்ரோன் சக்தி’ திட்டம்... ஒன்றிய அரசின் அனல் பறக்கும் பட்ஜெட் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 1, 2022

Budget 2022 Drone Shakti: அதென்ன ‛ட்ரோன் சக்தி’ திட்டம்... ஒன்றிய அரசின் அனல் பறக்கும் பட்ஜெட் அறிவிப்பு!

Budget 2022 Drone Shakti: அதென்ன ‛ட்ரோன் சக்தி’ திட்டம்... ஒன்றிய அரசின் அனல் பறக்கும் பட்ஜெட் அறிவிப்பு!


வேளாண் நிலங்களை அளவிடுவதற்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று பட்ஜெட் 2020இல் (Budget 2022) அறிவித்துள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதற்காக 'ட்ரோன் சக்தி' (Drone Shakti) திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நாட்டின் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் நிலங்களை அளவிடுவதற்காக வரும் நிதியாண்டு முதல் ட்ரோன்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக ட்ரோன் சக்தி (Drone Shakti) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வேளாண் நிலங்களை அளவிடுவதற்காக ட்ரோன்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும். மேலும், ட்ரோன்களை பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள், ஊட்டச்சத்துக்கள் ஆகிய நிலங்களில் தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ள ஊக்கவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளார். இதுமட்டுமின்றி, ஸ்டார்ட் அப் விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படும் என்றார். நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு மார்ச் வரை வரிச்சலுகை உண்டு என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
புதிய ட்ரோன் விதிகள்
சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய ட்ரோன் விதிகள் 2021, தொழில் துறை நிறுவனங்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் வகையில் இருந்தது. முதலில் உளவு பார்ப்பதற்காக மட்டும் தான் ட்ரோன் அல்லது சிறிய ரக வானூர்தி தயாரிக்கப்பட்டது. பிற்காலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், ட்ரோனின் தேவைகளும் விரிவுபடுத்தப்பட்டன.ட்ரோன் தொழில்நுட்பம் வேளாண் துறைகளில், பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மனித உழைப்பால் செய்யக்கூடிய வேளாண் துறை சார்ந்த வேலைகளை, நேரத்தை விரயம் செய்யாமல் ட்ரோன் சிறப்பாக கையாள்கிறது. புதிய விதிகளின் படி, இதுவரை இருந்து வந்த ட்ரோனுக்கான தனித்துவமான அடையாள எண்ணுக்கான ஒப்புதலுக்கு, இனி காத்திருக்க தேவையில்லை. புதிய ட்ரோன்களின் ஒப்புதலுக்கு இதற்கு முன்பு 25 படிவங்கள் நிரப்பவேண்டி இருந்தது. அவை தற்போது 5ஆக குறைக்கப்பட்டுள்ளதுதொழில் முனைவோர் மகிழ்ச்சி
இதற்கு முன்பு வணிக ரீதியிலான ட்ரோன்களுக்கான, 10 ஆண்டுகள் ரிமோட் பைலட் உரிமத் தொகை 3 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. விவசாயம், சுரங்கம், உள்கட்டமைப்பு, கண்காணிப்பு, அவசரகால உதவி, போக்குவரத்து, புவி வரைபடம், பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் என கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் இந்த விதிகள் மூலம் நன்மைகளை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது.



No comments:

Post a Comment

Post Top Ad