நெருங்கும் காதலர் தினம்; ஓசூரில் குவியும் ஜோடிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, February 11, 2022

நெருங்கும் காதலர் தினம்; ஓசூரில் குவியும் ஜோடிகள்!

நெருங்கும் காதலர் தினம்; ஓசூரில் குவியும் ஜோடிகள்!

காதலர் தினத்தையொட்டி ஓசூரில் ரோஜா மலர்கள் வாங்க வியாபாரிகள் மட்டுமின்றி காதல் ஜோடிகள் பலரும் குவிந்து வருகின்றனர்.
பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம்(Valentine's Day) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காதலர்கள், காதல் தம்பதிகள், வயதானோர் என அனைவரும் தாங்கள் விரும்பும் நபர்களுக்கு ரோஜா மலர் வழங்குவது வழக்கம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்சாலைகள் மட்டுமின்றி மலர் சாகுபடியிலும் சிறந்து விளங்கும் பகுதியாக உள்ள. ஓசூரை சுற்றியுள்ள கெலமங்கலம், தளி, ராயக்கோட்டை, பாகலூர், பேரிகை,தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பசுமைக்குடில் அமைத்து சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் கோல்டு, சாவரின் பஸ்ட் ரெட், நோப்ளஸ், பஸ் ஒயிட், கிராண்ட் காலா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வகை ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.இந்த மலர்கள் வருடம்தோறும் கிறிஸ்துமஸ், நியூ இயர், காதலர் தினம் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள மக்கள் பொதுவாக கொண்டாடப்படும் விழாக்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. காதலர் தினத்தையொட்டி இந்தாண்டு ஓசூரில் இருந்து பிரான்ஸ், ஜெர்மன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுமார் 60 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாடுகளில் ரோஜா மலருக்கு வரவேற்பு குறைந்து இருந்தது. மேலும், ஏற்றுமதி செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்டது. இதனால், மலர் விவசாயிகள் கடும் நஷ்டமடைந்தனர்.தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெய்த பலத்த மழை காரணமாக ரோஜா மலர் செடிகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி சாகுபடி குறைந்துள்ளது. இருப்பினும், இந்தாண்டு கொரோனா பரவல் குறைந்து பொதுமக்கள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதால், கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போன்று ஆர்டர்கள் குவிந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள விவசாயிகள், காதலர்கள் பலரும் ஜோடியாக வந்து மலர்களை வாங்கிச்செல்வதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

உள்ளூர் சந்தையில் ஏற்றுமதி தரம் கொண்ட ரோஜா மலர் ஒன்று ரூ.10 முதல் 20 வரையும், 20 மலர்கள் கொண்ட ஒரு கட்டு 400 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad