பாஜகவில் ஏற்படும் பலே மாற்றங்கள்! 2024க்கு மோடி, அமித் ஷா தயாராகும் விதத்தை பாருங்க!
பாஜகவின் அரசு தான் மத்தியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வருகிறது. வரும் 2024ம் ஆண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி வருகிறது பாஜக தலைமை. அவர்கள் தயாராகும் விதத்தை இந்த தொகுப்பில் பாருங்களேன்!
2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. சில பல காரணங்களால், புதிய தலைமையை எதிர்பார்த்து காத்திருந்த இளைஞர் பட்டாளத்திற்கு குஜராத்தின் வளர்ச்சி நாயகர், புரட்சி நாயகர் என பல ஆன்லைன், ஆஃப்லைன் கேம்பைன்கள் செய்து மோடியை தங்கள் பிரதான அடையாளமாக வைத்து 2014ம் தேர்தலில் வெற்றிவாகை சூடியது பாஜக.
முதல் 5 ஆண்டுகளில் பெரியளவில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றாலும், சில அறிவிப்புகள் இந்தியாவையே உலுக்கியது. மேலும், மோடியின் ஆதரவு அளவு, கொரோனா அலையை போலவே, முதலாவதை விட, இரண்டாவது அலை சற்றே பலமாக வீசிய காரணத்தால், பெரும்பான்மையுடன் 2019ல் ஆட்சியை பிடித்தது பாஜக.
ஆனால், 2019ல் மோடியின் ஆட்சி மத்தியில் உருவானதில் இருந்து, பல எதிர்மறை விமர்சனங்கள், குளறுபடிகள், பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகிறது மோடியின் ஒன்றிய அரசு. இதனால் 2024ம் ஆண்டு தேர்தலை பாஜக எப்படி சந்திக்கும், வியூகங்கள் எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்வியாக இருக்கையில், சமீபத்தில் The Great Khali என்று பிரபலமாக அழைக்கப்படும் WWE வீரர் பாஜகவில் இணைந்தார்.இவ்வளவு நாள் வியூகங்கள், பலம் குறித்து சீரியஸாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென காளியின் வருகையால் சற்றே காமெடி தூக்கலாக மீம்ஸ் வடிவத்தில் சில வியூகங்கள் வைரலாகி வருகின்றன. அவற்றில் சிலவன தான் இவை...
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அரியணையில் அமர்ந்திருக்கும் மோடியின் அரசு, 2024ம் ஆண்டுக்கு காளியின் பலத்துடன் களம்காணலாம்.. இப்படியும்...
No comments:
Post a Comment