மதுரையில் மறுதேர்தல்… அதிர்ச்சியில் உறைந்த அரசியல் கட்சிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 19, 2022

மதுரையில் மறுதேர்தல்… அதிர்ச்சியில் உறைந்த அரசியல் கட்சிகள்!

மதுரையில் மறுதேர்தல்… அதிர்ச்சியில் உறைந்த அரசியல் கட்சிகள்!திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டில் 160 பேர் கையெழுத்திடாமல் வாக்களித்ததால் அங்கு மறுதேர்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில்(கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 17-ஆவது வார்டில் உசிலம்பட்டி சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலையப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான வாக்குச்சாவடியில் 160 பேர் பதிவேட்டில் கையெழுத்திடாமல் வாக்குப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது.

இந்த வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் நகராட்சி தலைவர் உமாவிஜயன், திமுக சார்பில் ராஜம்மாள் போட்டியிடுகின்றனர். இந்த வாக்குச்சாவடியில் 654 பெண்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் பெண் ஒருவர் வாக்களிக்க வந்தபோது அவரது வாக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட நிலையில், சம்பவ இடத்திற்உ வந்த தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பிரச்சனைக்கு உள்ளான வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad