யூடியூப்பில் உலக சாதனை படைத்த பிரதமர் மோடி!
உலக அளவில் யூடியூப் சேனலில் அதிக subscribers கொண்ட பிரபலங்களின் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் உலக அளவில் டாப்பில் இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. தற்போது அவர் மற்றொரு பிரபல சமூக ஊடகமான யூடியூபிலும் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் உலக அளவில் ஒரு கோடி subscribersயை கடந்துள்ளது.
மோடிக்கு அடுத்தபடியாக பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனோரா 36 லட்சம் சப்ஸ்கிரைபர்களுடன் இரண்டாவது இடத்திலும், 30.7 லட்சம் சப்ஸ்கிரைபர்களுடன் மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மேனுவல் லோபஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் யூடியூப் சேனலை 5.25 லட்சம் பேரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சேனலை 2.12 லட்சம் பேரும் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறனர். பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த 2007 இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment