வருகிறதா கொரோனா நான்காவது அலை? -உலக மக்கள் அச்சம்!
ஓமைக்ரான் வைரசின் உருமாற்றம் அடைந்த பிஏ2 வகை வைரஸ், அதிவேகமாக பரவக்கூடியதுடன், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா முதல் அலையில் ஐரோப்பிய நாடுகளும், இரண்டாம் அலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்ததுடன், லட்சக்கணக்கில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
கொரோனா அலையின் பிடியில் இருந்து ஒரு வழியாக தப்பி பிழைத்தோம் என்று உலக மக்கள் மெல்ல மெல்ல தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருந்த வேளையில் கொரோனா மூன்றாவது அலையின் பிடியில் உலகம் சிக்கியது.
கடந்த ஒன்றரை மாதங்களாக மூன்றாவது அலையால் உலக மக்கள் அவதிப்பட்டு வந்தாலும் இந்த முறையில் முதல், இரண்டாவது அலையை போன்று பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்படாததால், மக்கள் சற்று நிம்மதி அடைந்திருந்தனர்.
இந்த நிலையில், ஓமைக்ரான் வைரசின் உருமாற்றம் பெற்ற பிஏ2 வகை வைரஸ், ஓமைக்ரான்விட அதிவேகத்தில் பரவக்கூடியதுடன், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது எனவும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன், டென்மார்க், இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பிஏ2 வகை வைரஸ் பரவியுள்ளதாகவும், தடுப்பூசி மட்டுமே வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களஐ காக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஓமைக்ரானின் உருமாற்றம் பெற்ற பிஏ2 வைரஸ் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால், விரைவில் உலகம் கொரோனா நான்காவது அலையை எதி்ர்கொள்ள தயாராக வேண்டுமா என்ற அச்சத்துடனான கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment