பணிக்குச் செல்லும் பெண்கள் இப்படிதான் இருக்கணுமாம்: தலிபான் அரசு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
ஆப்கானிஸ்தானி்ல் பணிக்கு செல்லும் பெண்களுக்கு தலிபான் அரசு கடும் ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன் பிறகு அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மேற்கத்திய ஆடைகளை அணியக் கூடாது, . தொலைக்காட்சியில் பெண்கள் இடம்பெறும் நாடகங்களை ஒலிபரப்ப கூடாது எனபன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் எனவும், தேவைப்பட்டால் உடலை போர்வையால் கூட மறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்கள் வேலை இழக்க நேரிடும் எனவும் தலிபான் அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஆப்கன் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெண்கள் சரியான பாதுகாப்பு இல்லாமல் பணிக்கு செல்லக் கூடாது. பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை அவர்கள் பின்பற்றவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.பணியிடத்தில் தங்களது விருப்பப்படி பெண்கள் பெண்கள் ஹிஜாபை அணிந்துக்
கொள்ளலாம். ஆனால் அதனைக் கொண்டு தங்களது உடலை அவர்கள் சரியாக மறைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஒரு போர்வையை கொண்டு கூட பெண்கள் தங்களது உடம்பை மறைத்துக் கொள்ளலாம். இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத பெண்கள் வேலை இழக்க நேரிடும்' என்று ஆப்கன் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment