நாட்டு மக்களுக்கு ஷாக் அறிவிப்பு கொடுத்துள்ள இலங்கை அரசு!
மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக இலங்கையில் நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கையின் அன்றாட மின் தேவையில் பெரும் பங்கு நீர் மின்சக்தி உற்பத்தி மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீர் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதையடுதது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு, நீர் மின் உற்பத்தி குறைவு காரணமாக மின்வெட்டு நேரத்தை அதிகரி்க்க வேண்டிய கட்டாயம் ஏ்ற்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டின் சில பகுதிகளில் 4:30 மணி நேரமும், மற்ற சில பகுதிகளில் 4:40 மணி நேரமும் நாளை முதல் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.நாட்டை 11 மையங்களாக பிரித்து, அவற்றில் A,B,C
பிரிவுகளில் 4 மணி 40 நிமிடங்களுக்கும் P,Q,R,S,T,U,V,W பிரிவுகளி்ன் கீழ் வரும் பகுதிகளில் 4 மணி 30 நிமிடங்களுக்கும் நாளை முதல் மின்லெட்டு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டை 11 மையங்களாக பிரித்து, அவற்றில் A,B,C பிரிவுகளில் 4 மணி 40 நிமிடங்களுக்கும் P,Q,R,S,T,U,V,W பிரிவுகளி்ன் கீழ் வரும் பகுதிகளில் 4 மணி 30 நிமிடங்களுக்கும் நாளை முதல் மின்லெட்டு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment