ரயில் டிக்கெட் புக்கிங் - இனி எல்லாமே ஈசிதான்! பயணிகள் மகிழ்ச்சி!!
இந்த ஆப் மூலமாக நீங்கள் ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட் உறுதியாகப் பெறலாம்.
இந்திய ரயில்வேயில் டிக்கெட் வழங்கும் நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலமாக நீங்கள் சில நிமிடங்களில் உறுதிப்படுத்தப்பட்ட சீட்டை (கன்ஃபார்ம் டிக்கெட்) பெற முடியும். வீட்டிலேயே அமர்ந்துகொண்டு இந்த வேலையை நீங்கள் ஈசியாக முடிக்கலாம்.நிறையப் பேர் IRCTC ஆப் மூலமாக தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். இதில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை என்றால், உங்கள் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படும். தட்கல் டிக்கெட் உடனடியாகக் கிடைக்க IRCTC ஒரு தனி ஆப்பை (கன்ஃபர்ம் தட்கல் - confirm tkt) அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் உதவியுடன், நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை மிக எளிதாக பதிவு செய்யலாம். இதன் மூலம் குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்கும் இருக்கைகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.இதன் மூலம் நீங்கள் எளிதாக டிக்கெட் பதிவு செய்யலாம். இனி வெவ்வேறு ரயில் எண்களைப் பதிவிட்டு கிடைக்கக்கூடிய இருக்கைகளைத் தேட வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் அந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களிலும் கிடைக்கும் டிக்கெட் விவரங்களை நீங்கள் பார்க்க முடியும். இந்த ஆப் மூலம் நேரத்தை வீணடிக்காமல் உங்கள் தேவைக்கு ஏற்ப எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து இந்த கன்ஃபர்ம் தட்கல் ஆப்பை பதிவிறக்கம் செய்யலாம்.
கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட்டை உடனே பெறுவதற்கான சில வழிகள்:
மாஸ்டர் லிஸ்ட்டில் நீங்கள் முன்பதிவு செய்ய
விரும்பும் அனைத்து பயணிகளின் தகவலையும் முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும்.
IRCTC கணக்கின் my profile பகுதிக்குச் சென்று உங்கள் இந்த மாஸ்டர் லிஸ்டை தயாரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது நேரத்தை மிச்சப்படுத்தலாம். புக்கிங் செய்யும்போது பயணிகளின் தகவல்கள் ஒரே கிளிக்கில் கிடைக்கும்.டிக்கெட் முன்பதிவு செய்யும் போது உங்களது இண்டர்நெட் ஸ்பீடு வேகமாக இருக்க வேண்டும்.
பணம் செலுத்த UPI Wallet அல்லது இண்டர்நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்த வேண்டும். இது நேரத்தை மிச்சப்படுத்தும்.
நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமாகவும் ஐஆர்சிடிசி இ-வாலட்டில் பணத்தைச் சேர்க்கலாம். அதன் மூலம் எளிதாக டிக்கெட் புக்கிங் செய்ய முடியும்.
No comments:
Post a Comment