திருத்துறைப்பூண்டி தேர்தலால் நாசமான வீடு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 22, 2022

திருத்துறைப்பூண்டி தேர்தலால் நாசமான வீடு!

 திருத்துறைப்பூண்டி தேர்தலால் நாசமான வீடு!


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்து கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
தமிழகம் முழுவதும் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மும்முரமாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நிறைவடைந்தது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11வது வார்டில் வெற்றிக்கனியை பறித்தது.அப்போது திருத்துறைப்பூண்டி பதினோராவது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் ராமலோகேஸ்வரி வெற்றி பெற்றதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 11வது வார்டுக்கு உட்பட்ட பாமனி ரோடு மீனாட்சி வாய்க்கால் பகுதியை சேர்ந்த பானுமதி என்பவரின் கூரை வீட்டில் பட்டாசு பட்டு தீப்பிடித்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த தீயினை அணைக்க முயன்றனர். இருப்பினும் அவரகளால் அதனை அணைக்க முடியவில்லை. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் வீடு மளமளவென எரிந்து சர்வ நாசமானது. லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து கருகி சாம்பலானது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad