ஐபிஎல் ஸ்டார் 'யார்க்கர் கிங்' தங்கராசு நடராசன் வைரல் மீம்ஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 22, 2022

ஐபிஎல் ஸ்டார் 'யார்க்கர் கிங்' தங்கராசு நடராசன் வைரல் மீம்ஸ்!

ஐபிஎல் ஸ்டார் 'யார்க்கர் கிங்' தங்கராசு நடராசன் வைரல் மீம்ஸ்!


சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜனின் மீம்ஸ், இந்த தொகுப்பில் காணலாம்.
சின்னப்பம்பட்டியில் பிறந்து, இன்று சிட்னியில் இருந்து சோனி சேனலில் தமிழில் பேசி, திறமை இருந்தால், வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு புதிய உதாரணமாக வளர்ந்து நிற்கிறார் தங்கராசு நடராஜன்.
இவரது அப்பா ஒரு நெசவாளி மற்றும் அம்மா சாலையோர சிக்கன் கடை வைத்து நடத்தி வந்தவர். ஐபிஎல் மூலம் யார்க்கர் கிங் என உலக கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் நடராஜன்.
நடந்து முடிந்த இந்தியா VS ஆஸ்திரேலியா இருபது ஓர் போட்டி தொடரில், இந்தியா தொடரை வெல்ல முக்கியமாக இருந்த வீரர்களில் நடராஜனும் ஒருவர்.

இத்தொடரில்தொடர் நாயகன் விருது ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கப்பட்டது. ஆயினும், ஹர்திக் பாண்டியா, இந்த விருது பொருத்தமானவர் நடராஜன் என்று கூறி அவர் கையில் கொடுத்து பாராட்டி இருந்தார்.

இப்படி ஐபிஎல் தொடரில் இருந்து டி20 தொடர் வரை குறுகிய காலக்கட்டத்தில் பெரும் உயர்வையும், நிறைய பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார் நடராஜன்.

அதே சமயத்தில், மீம் க்ரியேட்டர்ஸ் தங்கள் பங்குக்கு நடராஜனை மீம்ஸ் மூலமாக பாராட்டி வருகிறார்கள். அப்படி வைரலாகிய மீம்ஸ் சிலவனவற்றை இந்த தொகுப்பில் காணலாம்ராஜா ராணி மீம் டெம்பிளேட் மூலம், விராத், வார்னரையும் வம்பிழுத்த மீம்ஸ் க்ரியேட்டர்ஸ்...

எப்படியான சூழலில் இருந்து நடராஜன் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். நடராஜனின் இந்த வெற்றி, பலருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது...

ஆஸ்திரேலியா மண்ணில் ஜொலித்த தமிழ் தங்கங்கள்... தங்கராசு நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர்.ஆளுக்கொரு தொடர் என ஆஸ்திரேலியா, இந்தியா பகிர்ந்து கொண்டாலும். இந்திய அணி இந்த தொடரில் நிறைய கேட்சுகள் தவறவிட்டிருந்தனர். அதை கலாய்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த மீம்.


No comments:

Post a Comment

Post Top Ad