ஜாமீன் கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்... கோர்ட் முடிவு என்ன?
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் திமுக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சென்னை போலீஸார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர்.
கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஆற பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமக்கு ஜாமீன் கோரி, ஜெயக்குமார் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்க காவவ் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் அவரை மார்ச் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.மற்றொரு மனு: ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுப்பட்டது தொடர்பான மற்றொரு வழக்கிலும் ஜாமீன் கோரி ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
திமுக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment