ஓசூரில் பாமக ஆதரவுடன் திமுக மேயர்... வேட்பாளர் யார் தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 23, 2022

ஓசூரில் பாமக ஆதரவுடன் திமுக மேயர்... வேட்பாளர் யார் தெரியுமா?

ஓசூரில் பாமக ஆதரவுடன் திமுக மேயர்... வேட்பாளர் யார் தெரியுமா?



ஓசூர் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பாமக, சுயேச்சைகள் ஆதரவுடன் திமுக மேயர் நாற்காலியை பிடிக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, மற்றும் பர்கூர், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய 6 பேருராட்சிகள் உட்பட 8 நகர்ப்புற அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. காலை முதலே முன்னிலை வகித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கனியை தங்கள் வசப்படுத்தினர். ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்ற வரலாற்று சாதனை திமுக தனதாக்கவுள்ளது.ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வார்டுகளில் திமுக - 21, அதிமுக - 16, காங்கிரஸ், பாஜக, பாமக தலா - 1, சுயேச்சைகள் 5 இடங்களை கைப்பற்றினர். இதில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 23 கவுன்சிலர்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் தொடர் இழுபறி நீடித்து வந்தது.இருப்பினும் திமுக 21 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஓரிடத்திலும் வென்றுள்ளதால் சுயேச்சையாக வெற்றி பெற்றவர்களிடம் குதிரை பேரம் நடந்து வருவதாக தகவல் பரவியது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுக்கு ஆதரவு நிலைபாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பாமக மற்றும் 3 சுயேச்சைகள் ஆதரவுடன் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நபர் ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்க உள்ளார். ஒரு வழியாக யார் எந்த கட்சி மேயர் பதவியை கைப்பற்றுவது என்ற சிக்கல் தீர்ந்துள்ளது.ஆனால், திமுகவில் யார் மேயராக வருவது என்று கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. அதில், 23வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா(S.A.Sathya) முந்துவதாக திமுக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ஓசூரின் மேயர் எஸ்.ஏ.சத்யா தான் என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் துணை மேயர் யார்? காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad