கொரோனா முககவசம்... இலங்கை மக்களுக்கு விரைவில் வருகிறது ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 21, 2022

கொரோனா முககவசம்... இலங்கை மக்களுக்கு விரைவில் வருகிறது ஹேப்பி நியூஸ்!

கொரோனா முககவசம்... இலங்கை மக்களுக்கு விரைவில் வருகிறது ஹேப்பி நியூஸ்!


பொதுமக்கள் முககவசம் அணிவதில் பல்வேறு தளர்வுகளை அரசு விரைவில் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
                                                                                                                             பல்வேறு உலக நாடுகளை போலவே இலங்கையையும் கொரோனா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வாட்டி வதைத்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக உச்சத்தில் இருந் கொரோனா மூன்றாவது அலை சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனையடுத்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இலங்கை அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.


இதில் முக்கிய அம்சமாக திருமணம் போன்ற பொது நிகழ்ச்சியில் மக்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விரைவில் தளர்த்தபட உள்ளதாக இலங்கை சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா முதல், இரண்டு மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெரும்பாலான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவர்களின் நோய எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த அளவு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொது நிகழ்வுகளில் மக்கள் முககவசம் அணிய வேண்டாம் என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
எனினும் மருத்துவமனை, காய்கறி மார்க்கெட் போன்று மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் முககவசம் அணியவதிலும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதிலும் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று தெரியவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் மொத்தம் 1,230 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுநாள்வரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிிக்கை 6.36 லட்சமாக உயர்ந்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad