நிலவில் மோதப் போகும் ராக்கெட்.. "அது நாங்க இல்லை".. ஓடி வந்த சீனா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, February 21, 2022

நிலவில் மோதப் போகும் ராக்கெட்.. "அது நாங்க இல்லை".. ஓடி வந்த சீனா!

நிலவில் மோதப் போகும் ராக்கெட்.. "அது நாங்க இல்லை".. ஓடி வந்த சீனா!


ராக்கெட் ஒன்றின் உதிரி பாகம் நிலவில் மோதவுள்ளது. அது தங்களுடையது அல்ல என்று சீனா மறுப்பு.
நிலவின் மீது ஒரு ராக்கெட் போய் மோதவுள்ளது. இது யாருடைய ராக்கெட் என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த ராக்கெட்டானது மார்ச் 4ம் தேதி நிலவில் மோதும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முதலில் இது அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேக்எக்ஸ் நிறுவனம் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஏவிய ராக்கெட்டிலிருந்து பிரிந்த உதிரி பாகமாக கருதப்பட்டது. இது விண்வெளியில் கடந்த 7 வருடமாக மிதந்து கொண்டிருந்தது. ஆனால் அது ஸ்பெஸ்எக்ஸ் ராக்கெட்டின் உதிரி பாகம் கிடையாது என்று பின்னர் கண்டறியப்பட்டது.


இந்த நிலையில் சீனாவின் ராக்கெட் பாகமாக இது இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் சீனா அதை மறுத்துள்ளது. மோதவுள்ள ராக்கெட்டோ அல்லது ராக்கெட் பாகமாக எங்களுடையது அல்ல என்று சீனா விளக்கியுள்ளது.

ஆனால் கடந்த 2014ம் ஆண்டு சீனா ஏவிய ராக்கெட்டின் உதிரி பாகமாக இது இருக்கலாம் என்று நாசா வலுவாக நம்புகிறது. நிலவில் மோதவுள்ளது ராக்கெட்டில் இடம் பெற்றுள்ள பூஸ்டர் பாகம் என்று கூறப்படுகிறது.
விண்வெளி ஆய்வில் சமீப காலமாக சீனா தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவை மிஞ்சி விண்வெளியில் தனது அழுத்தமான தடத்தைப் பதிக்க சீனா மும்முரமாக உள்ளது. உலகின் 2வது பெரிய பொருளாதார வல்லரசான சீனா விண்வெளி ஆய்வுக்கு மிகப் பெரிய அளவில் செலவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தையும் அது கையில் வைத்துள்ளது. இதுவரை அமெரிக்கா மட்டுமே நிலவுக்கு மனிதனை அனுப்பி வைத்துள்ளது. வேறு எந்த நாடும் அதன் பின்னர் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கு மட்டுமே உரித்தாக இருக்கும் இந்த சாதனையை முறியடிக்க சீனா தற்போது தீவிரமாக உள்ளது என்பது முக்கியமானது.

No comments:

Post a Comment

Post Top Ad