யானைகளை வேட்டையாடும் மர்ம கும்பலுக்கு வலைவீச்சு!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 17, 2022

யானைகளை வேட்டையாடும் மர்ம கும்பலுக்கு வலைவீச்சு!!

யானைகளை வேட்டையாடும் மர்ம கும்பலுக்கு வலைவீச்சு!!காட்டுப் பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பிடிபட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலையில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலை பாதுகாக்கப்பட்ட புலிகள் வாழும் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. .இருப்பினும் வன உயிரின அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று ராஜபாளையம் அருகே புல் பத்தி காட்டுப்பகுதியில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான இரண்டு யானை தந்தங்கள் கைப் பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுந்தரராஜபுரம் பகுதியில் இரண்டுக்கும் மேற்ப்பட்ட நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானையை வேட்டையாடிய கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

இங்குள்ள வன பாதுகாவலர்கள் உட்பட அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் எண்ணற வனவிலங்குகள் வேட்டையாடி கொல்லப்பட்டுள்ளது. ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தி வேட்டையாடுவதால் எதிர்காலத்தில் காடுகள் அழியும் நிலை ஏற்படலாம் என வன உயிரின ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் ஏற்படப்போகும் குற்றங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வன உயிரினங்களை பாதுகாக்க முன்வர வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் நவீன ஆயுதங்கள் மூலம் வன விலங்குகள் வேட்டையாடி கொல்லபடுவதால் காட்டு பகுதிக்குள் நக்சலைட் நடமாட்டமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad