இரு பாட்டி... செருப்பு மாட்டிவிட்றேன்; டி எஸ் பி வேற லெவல்! வைரலாகும் புகைப்படம்.
மூதாட்டி ஒருவருக்கு செருப்பு மாட்டி விட்ட டி எஸ் பி யின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மூதாட்டியின் செருப்பை சரி செய்து மாட்டிவிட்ட டிஎஸ்பி யின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி உள்ள 36 வார்டுகளுக்கு வேட்புமனு தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் இன்று பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். இதனால் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.இதனையொட்டி குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரே குடியாத்தம் டி எஸ் பி ராமமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது வயதான மூதாட்டி நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது டி எஸ் பி அந்த மூதாட்டியின் அருகே சென்று உங்களுக்கு ஏதாவது உதவி செய்யனுமா என்று கேட்டுள்ளார். உடனே சற்றும் தயங்காமல் இந்த செருப்பால் தான் நான் இப்படி நடக்க நேரிட்டது என்று கூறியுள்ளார்.
மூதாட்டி கையில் பை வைத்திருந்ததால் சரி செய்வதற்கு மிகவும் சிரமத்துக்குள்ளானார். உடனே செருப்பை எடுத்த டி எஸ் பி கையிலெடுத்து சரி செய்து மீண்டும் அவருடைய காலிலேயே மாட்டியுள்ளார். இதனை அங்கிருந்த மற்றொரு காவலர் புகைப்படம் எடுத்துள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்களும், டி எஸ் பியின் செயலும் சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் அந்த டி எஸ் பி யை சமூக ஆர்வலர்களும், இணையதள வாசிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment