முகம் கலராகணுமா? எலுமிச்சை பழத்தை மட்டும் வெச்சு முகத்தை எப்படி கலராக்கலாம்...
வைட்டமின் சி நிறைந்தது எலுமிச்சை. இதை உணவில் மட்டுமல்ல, சருமம், தலைமுடி என அழகு, ஆரோக்கியம் என பல வழிகளில் பயன்படுத்துகிறோம். அந்த எலுமிச்சையை வைத்து முகம் சிவப்பாக எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
கருப்பு என்பது அழகு பேரழகு தான். ஆனால் முகம் கருப்பாக இருந்தால் பரவாயில்லை. சிலருக்கு அன் ஈவன் டோன் என ஆங்காங்கே கருமையாக இருக்கும். சருமத்தில் கருந்திட்டுக்கள், மருக்கள், மாசுக்களால் முகத்தின் நிறம் கருமையடையும். அவற்றை சரி செய்து முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
வெறும் எலுமிச்சை சாறில் சில துளிகள் தண்ணீர் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்.
தண்ணீருடன் சேர்த்துப் போடுவதால் சருமத்தில் ஏதேனும் அழற்சி இருந்தாலும் சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்களும் அரிப்பு, எரிச்சல் எதுவும் இருக்காது.
எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம், கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்யலாம். ஓரிரு வாரங்களிலேயே சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
தயிரும் எலுமிச்சையும்
தயிர் சருமத்துக்கு மிகச் சிறந்த மாய்ச்சரைஸராகச் செயல்படுகிறது. அதோடு சருமத்தை மழகவும் மென்மையாக வைத்திருக்க உதவும்.
குறிப்பாக ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு தயிர் பெஸ்ட் சாய்ஸ். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பாலைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக தயிர் சேர்ப்பது சிறப்பு.
எலுமிச்சை சாறில் தயிர் சிறிது சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் கழுவ முகத்தின் கருமை நீங்கி பொலிவாகவும் கலராகவும் மாற ஆரம்பிக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் அப்ளை செய்தால் அது முகத்துக்கு ஒருவித எலாஸ்டின் தன்மையைக் கொடுக்கும்.
சருமத் துளைகளுக்குள் ஆழமாகச் சென்று சருமத்துக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவதோடு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் குறைக்கும்.
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி காய விடுங்கள்.
இது உலர உலர பீல் ஆஃப் மாஸ்க் போல இருக்கும். அந்த மாஸ்க்கை நீங்கிவிட்டு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக்கை போட்டு வந்தாலே சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதை உணர்வீர்கள்.
தேனுடன்
2 ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி உலர விடுங்கள்.
நன்கு உலர்ந்ததும் முகத்தில் லேசாக இறுக்கிப் பிடிக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் முகத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வாருங்கள்.
வாரத்தில் 3 நாட்கள் இதை செய்து வந்தாலே முகத்தின் நிறத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
பால்
எலுமிச்சை சாறு சருமத்தில் சிறந்த ப்ளீச்சாக செயல்படும். அதேபோல பால் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருத் துளைகளுக்குள் சென்று அழுக்குகளை நீக்கும்.
2 ஸ்பூன் பாலில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காட்டன் கொண்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்துவிட்டு வட்ட வடிவில் ஐந்து நிமிடங்கள் முகத்தில் மசாஜ் செய்து விட்டு பின் உலர விடுங்கள்.
15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவலாம். வாரத்தில் 3 நாட்கள் இதை செய்து வந்தாலே முகத்தில் ஆங்காங்கே இருக்கும் கருந்திட்டுக்களும் கருமையும் நீங்கி, முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
பால் பவுடர் (அ) மில்க் க்ரீம்
சருமத்தின் நிறத்தை பக்க விளைவுகள் எதுவுமில்லாமல் அதிகரிக்க வேண்டுமென்றால் எலுமிச்சை சாறுடன் சிறிது பால் பவுடர் அல்லது மில்க் க்ரீம் கலந்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை இரவில் தூங்கும்போது முகத்தில் தடவி, உலர விடுங்கள். பின்பு காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர, சருமத்தின் நிறம் மேம்பட ஆரம்பிக்கும்.
No comments:
Post a Comment