தொடர் விடுப்பில் பள்ளி மாணவர்கள்; அதிர்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 9, 2022

தொடர் விடுப்பில் பள்ளி மாணவர்கள்; அதிர்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை!

தொடர் விடுப்பில் பள்ளி மாணவர்கள்; அதிர்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை!



சுமார் 30 சதவீத மாணவர் தொடர் விடுமுறையில் இருப்பதால் பள்ளிக் கல்வித்துறை புதிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. எஞ்சிய வகுப்பினருக்கு வீட்டுப் பாடங்கள் மட்டும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது ஷிப்ட் முறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வழக்கமான நேரத்தில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கோவை மாவட்டத்தில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அதாவது, 30 சதவீத மாணவர்கள் தொடர் விடுமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட அளவில் தொகுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலின் மூலம் விவரம் தெரியவந்துள்ளது.
.இதுபற்றி தகவலறிந்த பள்ளிக் கல்வித்துறை பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஒருவேளை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்களோ என்ற கோணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளது. அதிலும் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பலர் பள்ளிக்கு வருகை புரியவில்லை என்ற தகவல் பெரிதும் அதிர்ச்சியூட்டுகிறது. இதையடுத்து விடுப்பில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் பேசி வருகின்றனர்.

உடனடியாக பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்பு கொள்ள முடியாத பெற்றோர்களை நேரில் சென்று சந்தித்து பேசியும் வருகின்றனர். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க தயக்கம் காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad