இனிமேல்.. பாதி சம்பளம் தான்; பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி!
இனிமேல் பாதி சம்பளம் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.
கொரோனா நோய் பரவல் காரணமாக கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களுக்கு கடந்த 19 மாதமாக பாதி சம்பளம் மட்டும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இடையில் பள்ளிகள் திறந்தபோது ஒருசில மாதம் முழு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் தொற்று பரவல் காரணத்தால் 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் மீண்டும் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுபோல் விடுமுறை விடப்பட்டால் பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே தனியார் பள்ளியின் இந்த அடாவடியை கண்டித்தும், முழு சம்பளம் வழங்க கோரியும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் குறிப்பிட்ட பள்ளி வளாகத்தில் திடீரென 40 ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் விமல் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் பீட்டர் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்.அப்போது அவர்கள் பள்ளி நிர்வாகம் முழு சம்பளத்தை வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
No comments:
Post a Comment