நீட் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 3, 2022

நீட் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா?

நீட் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா?


நீட் மசோதா விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார்.

நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தருணங்களில் நேரடியாக வலியுறுத்தியிருந்தார். ஆனால் 'நீட் விலக்கு மசோதா தமிழக சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது' என்று ஆளுநர் மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆளுநர் மாளிகை இவ்வாறு அதிரடியாக அறிவித்துள்ளதை அடுத்து, இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் (பிப்ரவரி 5) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் பாஜக, முதல்வர் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, 'நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது' என அக்கட்சியின் எம்எல்ஏவும், மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்புச் செய்தது.

கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பாஜக பிரதிநிதி வானதி சீனிவாசன், 'பாஜக சார்பில் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவித்து, இந்தத் தீர்மானித்தின் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியே வந்தோம்' என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Post Top Ad