தூண்டிவிட்டு பரபரப்பை உருவாக்குவாங்க.. பிக்பாஸை ஓப்பனாக தாக்கிய நடிகை ரேகா..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 8, 2022

தூண்டிவிட்டு பரபரப்பை உருவாக்குவாங்க.. பிக்பாஸை ஓப்பனாக தாக்கிய நடிகை ரேகா..!

தூண்டிவிட்டு பரபரப்பை உருவாக்குவாங்க.. பிக்பாஸை ஓப்பனாக தாக்கிய நடிகை ரேகா..!



நடிகை ரேகா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அண்மையில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜு ஜெயமோகன் டைட்டிலை வென்றார். பிரியங்கா இரண்டாம் இடத்தையும், பாவனி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பிக்பாஸ் சீசன் 5 முடியும் தினத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரேகா, பிக்பாஸ் குறித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், பதினைந்து நாள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன். பிக்பாஸில் நடப்பது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து பதினைந்து நாள் போய்விட்டு வந்தேன். அது முடிந்தவுடன் குக் வித் கோமாளி போய்விட்டு வந்தேன்.பிக்பாஸில் அந்த நூறு நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள். உதாரணமாக சனமாக இருக்கட்டும், வேறு யாராகவும் இருக்கட்டும், நான் தான் சமைக்கிறேன் என்று சொன்னேனே என்று சண்டை போடுவது வரை பாருங்கள், அதுதான் மக்களுக்குப் பிடிக்கிறது. எனவேதான் சண்டைபோடும் சூழ்நிலைகளை உண்டாக்குகிறார்கள். அடிக்கடி சண்டைகள் நடக்கும், வெள்ளிக்கிழமை மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். சனி, ஞாயிறு மாறிவிடுவார்கள்.

பிக்பாஸ் மூலம் நூறு நாட்கள் தான் பிரபலமாக இருக்கமுடியும். பிக்பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது. ஆனால் வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த நிலையில் யாரும் பொறுமையாக இருந்து காண்பிக்க வேண்டும். நான் 15 நாட்களும் பொறுமையாக இருந்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகை ரேகா.

No comments:

Post a Comment

Post Top Ad