கர்ப்பிணி காஜல் அகர்வால் நடித்த லேட்டஸ்ட் விளம்பரம்..கூட யார் நடிச்சிருக்கா தெரியுமா?
காஜல் அகர்வால் தனது தங்கை மகனுடன் நடித்த விளம்பரம் வைரலாகி வருகிறது
தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் காஜல் அகர்வால். அதன் பின் ஒருசில படங்களில் நடித்த காஜல் 2010 ஆம் ஆண்டு கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்தார். அப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நாயகியாக முன்னேறினார்
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் காஜல்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு கமலுடன் இணைந்தது நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்க ஒப்பந்தமானார் காஜல்.சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் சிலபிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் 2020 ஆண்டு காஜல் அகர்வால் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆனா பின்பும் படங்களில் நடித்து வந்த காஜல் திடீரென படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.
அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் படங்களில் நடிப்பதில்லை என்ற தகவல் வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் அவரது கணவர் கெளதம். இதையடுத்து அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படமும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் காஜல் அகர்வால் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்தவிளம்பர படத்தில் அவரின் தங்கை நிஷா அகர்வாலின் மகன் இஷானும் நடித்திருக்கிறார். சமூகத்தளத்தில் இந்த விளமபரத்தை பதிவிட்டுள்ளார் காஜல் அகர்வால். தற்போது இந்த வீடியோ செம வைரலாகிவருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment