திமுக இன்; அதிமுக அவுட்; எங்கேன்னு தெரியுமா?
திருத்தணி நகராட்சியில் 18-வது வார்டு வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை திமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருத்தணி நகராட்சியில் 18-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மனைவி சரஸ்வதி பூபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப் 19 ல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வேட்பாளர்கள் களத்தில் இறங்க காத்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பலரும் வேட்புமனு திரும்ப பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தணி நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 18வது வார்டில் இரண்டு பேர் மட்டுமே போட்டியிட்டனர். அதிமுக சார்பில் வாணிஸ்ரீ-யும் திமுக சார்பில் சரஸ்வதி -யும் மோதவிருந்தனர். இந்நிலையில் திடீரென அதிமுக வேட்பாளர் தன்னுடைய வேட்புமனுவை இன்று வாபஸ் பெற்றார். இதனையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரஸ்வதி போட்டியின்றி தேர்வாகுவதாக அறிவிக்கப்பட்டார். இச்செய்தியை கேட்டு திருத்தணி திமுக கட்சியினர் மகிழ்ச்சியில் மூழ்கினர்.
இதனையடுத்து போட்டியின்றி வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சரஸ்வதி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment