உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி; கேள்விகளால் மடக்கிய பெண்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 9, 2022

உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி; கேள்விகளால் மடக்கிய பெண்!

உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி; கேள்விகளால் மடக்கிய பெண்!


உதயநிதி ஸ்டாலினை பெண் ஒருவர் நறுக் கேள்விகளால் மடக்கினார். இதை சற்றும் எதிர்பாராத உதயநிதி ஸ்டாலின் திருதிருவென.. முழித்தார். இதையடுத்து அந்த பெண்ணை திமுகவினர் மிரட்டி, அமர வைத்தனர். ஆனாலும் அந்த பெண் உதயநிதி ஸ்டாலினுக்கு தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்து கொண்டு இருந்தார்.
அப்போது ஒரு பெண் அவரிடம் வந்து, ‘கூட்டுறவு நகை கடன் ஏன் தரலை?’ என்று உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த திமுகவினர் அந்த பெண்மணியினை மிரட்டி வாய் மூட கூறினர்.
இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, நாங்கள் சொன்னதை செய்தோம். எப்படி சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதோ, அதேப்போல, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுவோம். நீங்கள் செய்வீர்களா? என்று கேட்டார்.

அப்போது மீண்டும் அந்த பெண், ‘கூட்டுறவு நகைக்கடன் தரலை’ என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் அந்த ஒரு பெண்மணியிடம் ‘அமைதியா இருக்கிறாயா ? இல்லையா ?’ என்று மிரட்டினர்.

இதை எல்லாவற்றையும் நேரடியாக பார்த்த உதயநிதி ஸ்டாலின் எதுவுமே நடக்காத மாதிரி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வேறு சம்பவங்களை அடுக்கி கூறினார்.இதன் பின்பு, ‘அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மெத்தனமாக கடைபிடித்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா தடுப்பூசி போட திமுக அமைச்சர்களும், திமுக அரசும் களமிறங்கிய பின்னர் தான் கொரோனா கட்டுக்குள் வந்தது.

தற்போது திமுக சொன்ன வாக்குறுதிகள் அனைத்தினையும் நிறைவேற்றி விட்டோம்’ என கூறி வாக்கு சேகரித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேற லெவலாக வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad