'ஆர்.என்.ரவி RSS பண்ணையில் வளர்ந்த முதலை' - நாஞ்சில் சம்பத் ஆவேசம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, February 9, 2022

'ஆர்.என்.ரவி RSS பண்ணையில் வளர்ந்த முதலை' - நாஞ்சில் சம்பத் ஆவேசம்!

'ஆர்.என்.ரவி RSS பண்ணையில் வளர்ந்த முதலை' - நாஞ்சில் சம்பத் ஆவேசம்!


ஆர்எஸ்எஸ் பண்ணையில் வளர்ந்த மூதலைகளை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என திமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மதசார்பற்ற மற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ,கேரளா எதிர்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா, திமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
மேடையில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-
"சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வெள்ள சேதத்திற்கு மத்திய அரசிடமிருந்து ஒரு ரூபாய் கூட வரவில்லை. அதிமுகவை பாஜக குத்தகைக்கு கொடுத்துவிட்டார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கர்நாடகவிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் கர்நாடக முதலமைச்சர் வீட்டிற்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.

வட இந்திய ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்த தொகையில் நூற்றில் ஒரு பங்கு கூட தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கவில்லை.தமிழகத்தில் தாமரை மட்டுமல்ல ரோஜாவும், கனகாம்பரமும், மூல்லையும் மலரும் அதைவிடுத்து தாமரை மட்டுமே மலரும் என்று அதிகார திமிநீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் மீது மொத்த தமிழக மக்களும் கோவத்தில் உள்ளனர். ஆர்எஸ்எஸ் பண்ணைகளில் வளர்ந்த முதலைகள், ஆளுநர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தை அசைத்து பார்க்கமுயன்றால் சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவோம்" என நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை விடுத்தார். ஆளுநரை மிரட்டும் தொனியில் பேசிய நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad