ஓஹோ...உங்களுக்கு அவ்வளவு தைரியம் வந்திடுச்சா? -கொதித்தெழுந்த துரைமுருகன் எடுத்த அதிரடி முடிவு!
சீட் கிடைக்காத ஆத்திரத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்கியவர்கள் கட்சியில இருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் சார்பில் வார்டு கவுன்சிலர் சீட்டை பெற் கடும் போட்டி நிலவியது.
இந்த போட்டியை சமாளிக்கும் நோக்கில் சிலர் வேட்பாளர்களுக்கான நேர்காணலிலேயே தங்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் இவ்வளவு லட்சம், அவ்வளவு கோடி செலவிட தயார் என்று பகிரங்கமாக தெரிவித்து கட்சி தலைமைக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.இந்த பகிரங்க அறிவிப்புக்கும் பலன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த வேட்பாளர்கள் சிலர், 'எனக்கா சீட் இல்லன்னு; சொல்றீங்க; உங்கள என்ன செய்றேன் பாருங்க' என்று சவால் விடாத குறையாக, தங்களின் லோக் வெயிட்டை காட்ட சுயேச்சையாக களமிற்ங்கியுள்ளனர்.இப்படி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்த்து தனியாக களமிறங்க உள்ள வேட்பாளர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலாளர்
துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர், செங்குன்றம், மதுரவாயல், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர், தாம்பரம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, திருப்பூர், தருமபுரி -பென்னாகரம், தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தேர்தலில் தனியாக களமிறங்க உள்ள மொத்தம் 56 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment