கால்ல விழாத குறையா கல்யாணத்தை நிறுத்திட்டேன்: யூடியூப் பிரபலம் அதிர்ச்சி தகவல்..!
பிரபல புட் ரிவியூவர் இர்பானின் நிச்சயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முடிந்த நிலையில் தனது திருமணத்தை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
யூடியூப் மூலம் பிரபலமானவர் இர்பான். உணவு விமர்சகரான இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை என சொல்லலாம். பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று பலவிதமான உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிடுவார் இர்பான். இவரின் இணையத்தில் மிக பிரபலம்.தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான விமர்சனங்களை போடுவார். ஒருமுறை விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கமலஹாசனும் இர்பானின் யூடியூப் வீடியோக்களை ரசித்து பார்ப்பதாகவும், இவர் சாப்பிடுவதை பார்த்தால் தனக்கே பொறாமையாக இருக்கும் என்றெல்லாம் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவருக்கு நிச்சயார்த்தம் முடித்திருந்தது. தனது நிச்சயார்த்த புகைப்படத்தை பகிர்ந்திருந்த இர்பானுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர். மேலும் தனது திருமணம் அடுத்த நான்கு மாதத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் நிச்சயம் முடிந்து பல மாதங்கள் கடந்தும் இர்பான் திருமணம் பற்றி வாய் திறக்காத காரணத்தால் சோஷியல் மீடியாவில் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் தற்போது இர்பான் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில், என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளி வைக்கவில்லை, நின்றுவிட்டது. ஏனென்றால், என்னுடைய எண்ணத்திற்கும் அவங்களுடைய எண்ணங்களும் சரியாக பொருந்தவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன்.
வீட்டில் கையில் காலில் விழாத குறையாக பேசிய பிறகு தான் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின் பெண் வீட்டிலும் என்னுடைய சூழ்நிலை எடுத்து சொன்னேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள். என்னுடைய ரசிகர்களுக்கும் இதை சொல்லனும் என்று தான் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறேன். என்னுடைய திருமணம் நின்றுவிட்டது தள்ளிப் போக வில்லை. தயவு செய்து இனிமேல் திருமணம் பற்றி கேட்காதீர்கள். வேறு ஏதாவது ஜாலியாக பேசலாம் என்று கூறியுள்ளார். இர்பானின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment