என் மகள்கள் வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்தாலே போதும்... ஏன் அப்படி கூறினார் ரஜினி?.
என் மகள்கள் வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்தாலே போதும்... ஏன் அப்படி கூறினார் ரஜினி?நடிகர் ரஜினிகாந்த் தனது மகள்களை கண்டித்து பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
அடுத்தப்படம்நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் பூஜை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வரும் மே மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ரஜினியின் குடும்பத்தை மைய்யப்படுத்தி பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் அவரது கணவரான தனுஷும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பொது விழா ஒன்றில் தனது மகள்கள் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்துக்கு தனது மகள்கள் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தால் போதும் என்பதுதான் விருப்பம். இளைய மகள் சவுந்தர்யா படத் தயாரிப்பில் ஈடுபட்ட போது, தயாரிப்புப் பணிகளைக் கவனிக்கத் தனியாக ஆக்கர் ஸ்டுடியோ என்ற அலுவலகத்தைத் திறந்தார். அங்கு திரைப்பட பணிகள் மட்டுமின்றி திரை உலக நண்பர்களும் கூட ஆரம்பித்தனர்.
கண்டித்த ரஜினி
முதலில் கதை விவாதங்கள் மற்றும் சினிமா தொடர்பான பணிகள் நடைபெற்றன. பிறகு பார்ட்டி கொண்டாட்டம் என ஸ்டுடியோவில் மற்ற வேகைளும் தொடங்கின. இதனால் சவுந்தர்யா பெரும்பாலும் ஆக்கர் ஸ்டுடியோவில்தான் இருந்தார். இந்த விவகாரம் ரஜினிக்குத் தெரியவர, கண்டிப்புடன் ஆக்கர்
ஸ்டுடியோவை மூட உத்தரவிட்டார். இதையடுத்து ஆக்கர் ஸ்டுடியோ உடனடியாக மூடப்பட்டது.
புதிதாக சம்பாதிக்க வேண்டாம்
அந்த நேரத்தில் ஒரு பொது விழாவில் கலந்து கொண்ட ரஜினி, என் மகள்கள் திருமண வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்தால் போதும், படம் எடுத்து நீங்கள் புதிதாக சம்பாதிக்க வேண்டாம் என்றார். மேலும் இருக்கும் பணத்தைக் காப்பாற்றிக் கொண்டால் போதும். எனக்கு ஒரு பேரக் குழந்தையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் மனதில் இருந்ததை கொட்டித் தீர்த்தார்.
சவுந்தர்யாவை கண்டித்து
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்தப் பேச்சு நேரடியாக சவுந்தர்யாவைக் கண்டிப்பதாகவே இருந்தது. இதன் பிறகு சவுந்தர்யாவும் தன் போக்கை மாற்றிக்கொண்டு அமைதியானார். இந்த நேரத்தில்தான் ஐஸ்வர்யா புதிய படவேலையில் இறங்கினார். இதற்காகத் தனி அலுவலகத்தையும் திறந்தார். இவர் ஏற்கனவே 3, வை ராஜா வை போன்ற படங்களை எடுத்திருக்கிறார். இதனால் மீண்டும் சின்சியராக படத்தை எடுத்து முடிப்பார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் அவரது வாழ்க்கையும் கேள்விக் குறியாகியுள்ளது.
No comments:
Post a Comment