73 வயதில் கணவரை விவகரத்துவிட்டு காதலனை கரம்பிடித்த பாட்டி... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 15, 2022

73 வயதில் கணவரை விவகரத்துவிட்டு காதலனை கரம்பிடித்த பாட்டி...

73 வயதில் கணவரை விவகரத்துவிட்டு காதலனை கரம்பிடித்த பாட்டி...



73 வயது பாட்டி தள்ளாத காலத்திலும் தன் கணவரை விவகாரத்து செய்துவிட்டு புதிய காதலரை திருமணம் செய்துள்ளார். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்
இந்த உலகில் காதல் என்ற விஷயத்திற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. இதை தான் காதலுக்கு கண் இல்லை என சொல்லுவார்கள். இதற்கு அதர்த்தம் காதலில் விழுபவர்கள் எதையும் பார்ப்பதில்லை தன்னை காதலிப்பவரின் ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என எல்லாவற்றையும் கடந்து வருவது தான் காதல்.
இப்படியாக சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான காதல் கதை ஒன்று நடந்துள்ளது. அதை பற்றி தான் இங்கு காணப்போகிறோம்.

அமெரிக்காவைச் சேர்ந்த 73 வயது பாட்டி ஒருவர் திருமணமாகி 40 ஆண்டுகள் கழித்து தன் கணவரை விவகரத்து செய்துவிட்டு தற்போது வேறு ஒருவரை காதலித்து வருகிறார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ட்விட்டரில் Carol H. Mack என்ற பெயரில் இருப்பவர் 73 வயது பாட்டி இவர் தன் விரவில் மோதிரத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதை குறித்த கதையை சொல்லியுள்ளார்.அதில் அவர் "வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. 40 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு 70 வயதில் சிங்கிள் ஆகி, எதிர்பாராத விதமாக உண்மையான காதலை 73 வயதில் இந்த கொரோன பேன்டமிக் நடுவே பெற்று தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன்" என கூறியுள்ளார்.இவரது கணவர் 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்துவாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்தும் செய்துவிட்டார். தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒருவரை சந்தித்து அவருடன் காதலில் விழுந்து அவரையே தற்போது மோதிரம் மாற்றி திருமணமும் செய்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


No comments:

Post a Comment

Post Top Ad