தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? விவரித்த அதிகாரி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, February 3, 2022

தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? விவரித்த அதிகாரி

தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? விவரித்த அதிகாரி


கடந்த 3 நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த நிதி ஒதுக்கீடு தான் அதிகம் என்று ஐ.சி.எஃப் மற்றும் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஏ.கே.அகா்வால் தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்,தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடா்பாக ஐ.சி.எஃப் மற்றும் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஏ.கே.அகா்வால் காணொலி வழியாக செய்தியாளா்களை சந்தித்தாா்.
அப்போது பேசிய அவா், “மத்திய நிதிநிலை அறிக்கையில், ரயில்வேயில் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துவதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது எங்களின் முக்கிய கவனமாக உள்ளது.

தெற்கு ரயில்வேயில் பாதுகாப்புப் பணிக்காக, ரூ.2,374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நிதியாண்டுகளுடன் ஒப்பிடும் போது, இதுவே அதிகம். ரயில் தண்டவாளம் மேம்பாட்டு பணிக்காக, ரூ.1,470 கோடியும், பயணிகள் வசதிக்காக, ரூ.327.77 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் ரூ.28,307 கோடி செலவில் 3,077 கி.மீ. தூரத்துக்கு 25 புதிய பாதை, அகலப்பாதை, இரட்டைப்பாதை ஆகிய திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ. 2,812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது, 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.3,865 கோடியாக அதிகரித்துள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.7,134.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாதை திட்டப்பணிக்கு ரூ.59 கோடியும் , அகலப்பாதை திட்ட பணிகளுக்கு ரூ.346.80 கோடியும், இரட்டை பாதை திட்ட பணிகளுக்கு ரூ.1,445.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் மின்மயமாக்கல் திட்டப்பணிகளுக்கு ரூ.303.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னைகடற்கரை-எழும்பூா் இடையே 4ஆவது பாதைக்கு 54.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சில புதிய பாதை திட்டங்களுக்கு டோக்கன் தொகையாக தலா ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயை பொறுத்தவரை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முதலில் முடிக்கப்படும். அதன்பிறகு, இந்தத் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி மேற்கொள்ளப்படும்.தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய பாதை திட்டத்துக்கு ரூ.1,000 டோக்கன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று கூறினார்.
No comments:

Post a Comment

Post Top Ad