Pandian Stores: நடுத்தெருவில் நிற்கும் கடை பொருள்.. பிரச்சனைகளுக்கு காரணம் யார்.?: புது ட்விஸ்ட்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 5, 2022

Pandian Stores: நடுத்தெருவில் நிற்கும் கடை பொருள்.. பிரச்சனைகளுக்கு காரணம் யார்.?: புது ட்விஸ்ட்..!

Pandian Stores: நடுத்தெருவில் நிற்கும் கடை பொருள்.. பிரச்சனைகளுக்கு காரணம் யார்.?: புது ட்விஸ்ட்..!



பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய கடையை திறக்க முடியாததிற்கு காரணம் கதிர்தான் என்பது தெரிந்து அதிர்ச்சியடைகிறான் கண்ணன்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் மூர்த்தி தம்பிகளுக்கு தனம் அண்ணியாகவும், அவர்களின் மனைவிகளுக்கு அக்காவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வழி நடத்தும் பாசமான மனைவியாக பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ்.
'ஆனந்தம்' படத்தில் சீரியல் வெர்ஷன் என பலராலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் கலாய்க்கப்பட்டு வந்தாலும் பலர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது இந்த சீரியல். குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

கண்ணன் ஐஸ்வர்யாவை ஓடி போய் திருமணம் செய்து கொண்டதில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் திரைக்கதை பல ட்விஸ்ட்களை கண்டு வருகிறது. மீனா அப்பா கடையில் வேலை பார்த்த பையன் கண்ணனை ஆள் வைத்து அடிக்க, அவர்களை புரட்டி எடுக்கிறான் கதிர். இந்த சம்பவத்தால் கண்ணனை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறாள் தனம். மூர்த்தியும் குடும்பத்தினரின் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறான்.அதன்பின்னர் சுமூகமாக சென்று வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இடையில் புதிய கடை கட்ட ஏற்பாடு செய்தனர் அண்ணன், தம்பிகள். ஒரு வழியாக கடை கட்டிடம் கட்டி முடித்து, திறப்பு விழாவிற்கு தேதி குறித்து அனைவருக்கும் அழைப்பும் விடுத்து விடுகின்றனர். கடை திறப்பு விழாவிற்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், நீங்கள் கொடுத்த பேப்பர் சரியில்லை என்று நகராட்சியில் இருந்து கடைக்கு சீல் வைத்து விடுகின்றனர்.ஆனால் பில்டிங் கட்டியவர் நம்ம எல்லா பேப்பரும் சரியாக கொடுத்துவிட்டோம் என்கிறார். இதனால் என்ன பிரச்சனை என்று தெரியாமல் தவிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் நகராட்சி வாசலில் காத்திருக்கின்றனர். இதனிடையில் மீனா அவள் அப்பாவிடம் உதவி கேட்க, அவரோ இந்த கடையை திறக்கவில்லை என்றால் மகளையும், மருமகனையும் நம்ம பக்கம் இழுத்துக்கலாம் என பிளான் போடுகிறார்.
இதனிடையில் கதிரிடம் அடி வாங்கியவர்கள் கண்ணனை தனியாய் கூப்பிட்டு கலாய்க்கின்றனர். அதில் ஒருவன் எங்க அப்பாதான் மாநகராட்சி ஆபீஸர். நான் சொல்லிதான் உங்க கடைக்கு சீல் வைச்சாரு என சொல்கிறான். இதனை கேட்டு கண்ணன் அதிர்ச்சியடைகிறான். அவர்களிடம் கண்ணன் கெஞ்சியும், 'எங்களை அடிச்சா சும்மா இருப்போமா? இப்போ குடும்பமே சேர்ந்து அழுகுங்க' என சொல்லிவிட்டு போய் விடுகிறான்.

இந்த ட்விஸ்ட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே கடைக்கு தேவையான 3 லட்டசம் மதிப்பிலான பொருட்கள் லாரியில் ரோட்டில் நிற்கின்றன. இதனிடையில் கதிரும், ஜீவாவும் திட்டமிட்ட தேதியில் கடையை திறக்கலாம் என அண்ணன், அண்ணிக்கு சத்தியம் செய்து கொடுக்கின்றனர். இதனால் வரும் வாரம் சீரியல் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad