எலும்பை வலுப்படுத்தும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த உளுந்தங்கிச்சடி ரெசிபி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, February 5, 2022

எலும்பை வலுப்படுத்தும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த உளுந்தங்கிச்சடி ரெசிபி!

எலும்பை வலுப்படுத்தும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த உளுந்தங்கிச்சடி ரெசிபி!




பெண்கள் பூப்படையும் போது இடுப்புக்கும் கருப்பைக்கும் வலு கொடுக்க உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். தொடக்கம் முதலே உணவில் கவனம் செலுத்திவந்தால் மாதவிடாய் கால அசெளகரியம் இல்லாமல் இருக்கும். மாதவிடாய் பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
உணவு முறையில் கருப்பை நோய்கள் வராமல் தடுக்க பெண் பிள்ளைகள் பூப்படையும் காலம் முதலே சில உணவுகளை கட்டாயமாக்குவார்கள். அதில் முக்கியமானது உ.பருப்பு, நல்லெண்ணெய் இரண்டுமே.
உ.பருப்பில் வடை செய்வது மட்டுமே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் எண்ணெய் பலகாரமாக இல்லாமல் உடலுக்கு மேலும் வலு கொடுக்கும் உணவாக உளுந்து கிச்சடி செய்யலாம்.. இந்த உளுந்து கிச்சடி செய்முறை குறித்து பார்க்கலாம்.

தேவை

உபருப்பு - 1 டம்ளர்
வெங்காயம்- 50 கிராம்
தேங்காய்த்துருவல் - 1 கப்
பச்சை மிளகாய்- காரத்துக்கேறப்
தாளிக்க - தேவையான பொருள்கள்- கடுகு,உ.பருப்பு கறிவேப்பிலை, நல்லெண்ணெய்.

உ.பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து களைந்து கழுவி விடவும். வடைக்கு அரைப்பது போல பூக்க அரைத்து எடுக்கவும். அரைக்கும் போது உப்பு, பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த விழுதை இட்லி பானையில் வைத்து ஆவி கட்டி கொள்ளவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து இறக்கி அதை உதிராக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, நல்லெண்ணெய், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் உ.பருப்பு உதிராக இருந்ததை எடுத்து சேர்த்து கிளறவும். பிறகு தேங்காய்த்துருவல், கொத்துமல்லித்தழை சேர்த்து தூவி இறக்கவும்.

மிக சத்தான எளிமையான சிற்றுண்டி இது. இடுப்பு வலிமைக்கு ஏற்ற சிற்றுண்டி இது.


உ.பருப்பு ஊட்டச்சத்துக்கள்

உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஊட்டச்சத்துகள் மற்றும் தாது சத்துக்கள் அளவு நிறைந்துள்ளது.

உளுந்து அதிக கலோரி கொண்டவை உ.பருப்பு 100 கிராமில் 341 கலோரிகளை கொண்டுள்ளது. உளுந்தில் காணப்படும் மேக்ரோ நியூட்ரியண்ட்கள் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். முக்கிய ஊட்டச்சத்து புரதம் ஆகும். இதில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. குறிப்பாக ஹிஸ்டைடின், டிரிப்டோபான் மற்றும் ஐசோலூசின் போன்ற அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதில் இருக்கும் புரதம் உயர்தரமானது.


உளுந்தில் இருக்கும் வைட்டமின் பி9 அல்லது ஃபோலேட், வைட்டமின் பி1, வைட்டமின் பி2,வைட்டமின் பி3 வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் பி6 ஆகிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன.

இது பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்தின் மூலம். மேலும் இதில் பாஸ்பரஸ் , கால்சியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற தாது சத்துக்களும் குறைந்த அளவில் உள்ளன. குறைந்த அளவு செலினியம் உள்ளது.
இது கெட்ட கொழுப்பை குறைத்து பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சியை தடுக்கிறது.

நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

உளுந்து கிளைசெமிக் குறையீடு குறைவாக கொண்டவை. இது சிறந்த டையூரிக் ஆக செயல்படுகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்துவதில் இவை முக்கியமானவை. இது கால்சியம், இரும்பு மற்றும் பிற பொதுவான ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

வலி மற்றும் வீக்கத்துக்கு மருந்தாக இவை செயல்படுகிறது. உளுந்து இரும்புச்சத்தை கொண்டிருப்பதால் இது உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் அளவை அதிகரிப்பதில் சிறந்தவை. இது முக்கியமான ஊட்டச்சத்து கொண்டிருப்பதால் இரத்த சோகை உருவாகாமலும் தடுக்கிறது. மாதவிடாய் இரத்தபோக்கு ஈடு செய்ய இதில் இருக்கும் இரும்புச்சத்து உதவுகிறது.இனி உங்க வீட்டு பெண்களுக்கு உளுந்து கிச்சடியை சிற்றுண்டியாக செய்து கொடுங்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad