ரஜினி இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாரே.!அப்போ இனி அவ்ளோதானா ?
ரஜினி நடிப்பிலிருந்து சற்று ஓய்வு எடுக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன
சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று அவர் படத்தில் வந்த பாடலே அவரின் புகழை நமக்கெல்லாம் உணர்த்தியது. ரஜினியை தெரியாதவர்கள் யாருமில்லை, அவரை பிடிக்காதவர்களும் யாருமில்லை. சினிமா ரசிகர்களை தன் படங்களின் மூலம் காந்தமாய் தன் பக்கம் இழுத்தவர்தான் ரஜினி.
தொடர்வெற்றிகளின் மூலம் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடைந்த ரஜினி இன்றுவரை அந்த பட்டத்தை தக்கவைத்துள்ளார். ஆனால் சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ரசிகர்கள் தங்கள் சூப்பர்ஸ்டார் பழையமாதிரி திரையில் ஜொலிக்கவேண்டும் என ஆசைப்படுகின்றனர்.
ரஜினியும் தன் அடுத்த படத்தை ஒரு மெகாஹிட் படமாக கொடுத்துவிடவேண்டுமெனெ ஆர்வமாக வேலையில் இறங்கினார். இந்நிலையில் அவரது மகளின் விவாகரத்து செய்தி அவருக்கு அதிர்ச்சியளித்தது. இதனால் பெரும் சோகத்தில் ஆழ்ந்த ரஜினி தனது வீட்டில் யாரிடமும் பேசாது தனிமையில் இருக்கின்றாராம்.
எப்பொழுதாவது தன் நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் போனில் பேசிவருகிறாராம். இந்நிலையில் தன் அடுத்த படத்திற்காக பல இயக்குனர்களிடம் கதைக்கேட்ட ரஜினி இன்னும் தனது அடுத்த படத்தின் இயக்குனரை முடிவுசெய்யவில்லை. அதில் ஒருசில இயக்குனர்கள் மீண்டும்தரஜினியை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.
அப்போது ரஜினியை தொடர்புகொள்ள முடியவில்லையாம். அப்படி தொடர்புகொண்டாலும் ரஜினியின் தரப்பிலிருந்து சிறிதுகாலம் கழித்து நாங்களே தொடர்புகொள்வோம் என்று சொல்லிவிடுகின்றனாராம். மேலும் ரஜினி தற்போது சோகத்தில் இருப்பதால் சிறிது காலம் நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
ஆனால் சிலரோ ரஜினி தனது கவலையை மறக்க படவேலைகளில் இறங்கவுள்ளதாகவும் சொல்கின்றனர். இந்நிலையில் இந்த வதந்திக்கெல்லாம் ரஜினியின் அடுத்த படத்தின் அறிவிப்பைப்பற்றி அவர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment