Simbu: ஒரு வெற்றி படத்துக்கே இந்த நிலைமையா..? 'மாநாடு' தயாரிப்பாளர் வேதனை..!
சிம்புவின் 'மாநாடு' படம் வெளியாகி இன்றோடு 75 நாட்கள் ஆகியுள்ளதை ரோகினி திரையரங்கில் கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. சிம்புவின் கம்பேக் படமாக அமைந்த மாநாட்டில் எஸ்.ஜே. சூர்யாவின் மிரட்டலான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது.
'மாநாடு' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'மாநாடு' படம் வெளியாகி இன்றோடு 75 நாட்கள் ஆகிறது. இதனை ரோகினி திரையரங்கில் கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இந்தப்படம் வெளியாகி 75 நாட்களாக வெற்றி நடைபோட்டு வந்தாலும் இன்னும் விநியோகிஸ்தர்கள் கணக்கை ஒப்படைக்கவில்லை என 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.ஒரு வெற்றி படத்திற்கு இந்த நிலைமை என்றால் மற்ற படங்களின் நிலையை என்ன சொல்வது? இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்வது? நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போவதில் எந்த தவறும் இல்லை என யோசிக்க தோன்றுகிறது என கூறியுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த சிம்பு ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். இதனால் தான் இன்னமும் 'மாநாடு' படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகாமல் உள்ளது.
No comments:
Post a Comment