Samantha: யாரும் என் பேரை சொல்றது இல்லது.. இப்படியெல்லாம் தான் கூப்பிடுறாங்க..!
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் அண்மையில் மனம் ஒத்து பிரிவதாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். பிரிவு முடிவிற்கு பின் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா.
அண்மையில் நடிகை சமந்தா கோவாவுக்கு சென்றிருந்தார். அங்கு பனிச்சறுக்கு விளையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தம்முடைய இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். இணையத்தில் வைரலான சமந்தாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, அவற்றுக்கு லைக்குகளை குவித்தனர் ரசிகர்கள்.
அதில், ஜெஸ்ஸி, பிந்து, மதுரவாணி, ராஜி, பேபி, ராமலட்சுமி, தாரா, நித்யா, மித்ரா, ரச்சனா, அனுசுயா, வேம்பு ஆகிய கேரக்டரில் நான் நடித்திருப்பதால், என்னுடைய பெயர் சமந்தாவாக இருந்தாலும், பலர் என்னை இந்த கேரக்டர்களின் பெயரை கொண்டுதான் அழைத்து வருகின்றனர் என்று பதிவு செய்து உள்ளார். சமந்தாவின் இந்த க்யூட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
No comments:
Post a Comment