கொரோனா தடுப்பூசி... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
கொரோனா தடு்ப்பூசி குறித்து பிரிட்டனின கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்லன.
டெல்டா, ஆல்பா, ஓமைக்ரான் என்று உருமாறும் வைரஸ்களால் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் திறன் கொரோனா தடுப்பூசிகளுக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறி்த்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறை உருவாகும்போது அது மாற்றமடையும் அபாயம் உள்ளதால், அதன் வீரியம் எவ்வளவு வேகம் பிரதிபலிக்கிறதோ, அந்த அளவுக்கு புதிய மாறுபாடுகளால் தோன்றும் அபாயமும் அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ்களை தடுப்பூசிகள் எதிர்கொள்கின்றன என்பது உண்மைதான். கடுமையான நோய் தாக்கம் ,இறப்பைக் குறைப்பது தடுப்பூசிகளின் நோக்கமாக இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான உயிர்களும் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு பயனுள்ள தடுப்பூசி என்பது, அது செலுத்தப்பட்ட நபருக்கு தொற்று ஏற்பட்டாலும் அது பரவுவதற்கான வாய்ப்பை குறைக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நோய்த் தொற்று, தொற்று பரவுதலை முற்றிலுமாகத் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா தடுப்பூசிகளால் உருவாக்க முடியவில்லை என்றே தெரிகிறது.
ஒவ்வொரு கொரோனா அலையின்போதும் அன்றாடம் ஏற்படும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கையின் மூலம் இது தெளிவாகிறது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment