திருப்பத்தூர் அருகே உணவு தேடி வந்த 12 மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற 75 வயது முதியவரின் செயல் வனத்துறைக்கு பேரிடியை கொடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாச்சியார் குப்பம் பகுதியை சேர்ந்த சண்முகம் (75). இவர் அதே பகுதியில் உள்ள சாவத்திரி என்பவருடைய நிலத்தை சில மாதங்களுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்து நெற்பயிர் விதைத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், விவசாய பயிர்களை மயில்கள் சேதப்படுத்தியதின் காரணமாக நெல்லில் விஷம் கலந்து வயலில் வெளியே தூவி உள்ளார் இதன் காரணமாக இதனை உண்ட மயில்கள் அங்கேயே இறந்து கிடந்த உள்ளன.
இறந்துபோன மயில்கள்
அதனைத் தொடர்ந்து சாவத்திரியின் மகன் சிலம்பரசன் நிலத்திற்கு சென்று பார்த்த போது 12 மயில்கள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற சண்முகத்தை கைது செய்து 12 இறந்த மயில்களையும் எடுத்து சென்றனர். பிரேத பரிசோதனை செய்து இறந்த மயிலல்களை எரிக்க உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
விவசாயி சண்முகம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மயில்களுக்கு விஷம் வைத்து கொல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது. இச்சம்பவம் குறித்து பேசிய அதிகாரிகள், தேசியப் பறவையான மயிலை கொல்வது சட்டவிரோதமான செயல், இச்சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இதற்கான தண்டனை சுமார் ஏழு வருடங்கள் கிடைக்கப் பெறும் எனவும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தினர்.
அண்மையில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தில் இறந்துபோன மயில்களை புதைத்ததாக முதியவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆகும் காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இங்கு நிஜத்தில் ஒரு விவசாயி 12 மயில்களை கொன்றுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியைத்தான் கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment